2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (14), மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் சங்கம் தாதியர்கள் சங்கம், சுகாதார ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வுப் பெற்ற வைத்தியசாலையின் முன்னாள்  பணிப்பாளர் டாக்டர் எம்.இப்றாலெப்பை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் அவர் சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட  வைத்தியர் கே.கலாரஞ்சனியே தொடர்ந்தும் பணிப்பாளராக கடமையாற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--