2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

’வெளிநாட்டு பணத்தால் மாணவர்கள் போதைக்கு அடிமை’

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ். மாவட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்; சிலர், பாடசாலை கல்வியை நிறுத்திவிட்டு வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை கொண்டு அதிகளவு மதுபான பாவனை மற்றும் போதைபொருள் பாவனை மற்றும் பாரிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வருக்கின்றமை தொடர்பாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 18 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளை வட மாகாண முதலமைச்சர், தனது அலுவலகத்தில் நேற்று (14) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

மேற்படி கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.மாவட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஒரு தொகுதியினர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி கொண்டிருப்பதுடன், அவர்கள் அதிகளவு மதுபான பாவனை மற்றும் போதை பொருள்பாவனை ஆகியவற்றிலும் பாரிய குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

“இவர்களை பெற்றோராலும், தங்களாலும் கூட கட்டுப்படுத்த இயலாத நிலை காணப்படுவதாக கூறுகின்றனர்.

“மேலும், இவர்கள் பாடசாலை கல்வி மற்றும் உயர் கல்வியை நிறுத்திவிட்டு வெளிநாடுகளில் இருந்துவரும் பணத்தை கொண்டே இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் எனக்கு கூறியிருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறான சிறுவர்கள் எமது சமூகத்தில் சிறிய தொகையினர் ஆயினும் அவர்களால் எமது சமூகம் அடையும் பாதிப்புக்கள் மிக பெரியவையாக உள்ளது.

“இந்நிலையில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தொடர்பான பூரணமான தகவல்களை பெற்று எனக்கு வழங்குங்கள் என பொலிஸாரை கேட்டிருக்கின்றேன். அதனை கொண்டு வெளிநாட்டிலிருந்து மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாங்கள் ஆராய இருக்கின்றோம் என முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .