2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வெளிநாடு செல்லும் பணியாளர்களிடம் முக்கிய கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 11 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு தொழில்நிமித்தம் செல்வதை  பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நாட்டு மக்களிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பணியகம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

வௌிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாடுகளுக்கு செல்லவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு அமையவே மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரேனும் வௌிநாடுகளுக்கு செல்வதற்கு தயாராக இருப்பின், சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X