2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் விபத்து;தாயும் மகனும் பலி.

Super User   / 2010 ஜூன் 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

A9 வீதியில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ரக் வண்டி மோதியதன் காரணமாகவே கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் கொல்லப்பட்டவர்கள் 36 வயதான சிவனேசன் பிறேமளா தேவி மற்றும் அவரின் மகனான 6 வயது சயந்தன் என அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களது சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரோத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--