2021 ஜனவரி 27, புதன்கிழமை

வாகன விபத்தில் இலங்கை அகதி பலி

George   / 2016 ஜூலை 17 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜ்குமார் (34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வர்ணம் பூசும் தொழில் செய்துவந்த  தாப்பாத்தி காலனியை சேர்ந்த கரும்புலி (56) ஆகிய இருவரும் சேர்ந்து, எட்டயபுரத்திலிருந்து தாப்பாத்தி முகாமுக்கு, சனிக்கிழமை நண்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அயன்ராஜாபட்டி பஸ் நிறுத்தத்தையடுத்த அணுகு சாலையைக் கடந்து செல்கையில், இருக்கன்குடியிலிருந்து எட்டயபுரம் நோக்கிச் சென்ற வான், மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் ராஜ்குமார், சம்பவ இடத்திலேயே இறந்ததுடன் கரும்புலி பலத்த காயமடைந்தார். தகவலறிந்த மாசார்பட்டி பொலிஸார், ராஜ்குமார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

காயமடைந்த கரும்புலியை மீட்டு, கோவில்பட்டி அரச வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு, மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .