2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

விகாரையில் மகனை கைவிட்டுச் சென்ற தாய்

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியிலுள்ள அலிஹொலுஹார விகாரைக்கு வழிபாட்டுக்கென வந்த பெண்ணொருவர், தனது 3 வயது மகனை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த சிறுவன் தொடர்பில் விகாரையின் தலைமைப் பிக்கு பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த சிறுவனின் தாயை தேடும் பணியில் சூரியவெவ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பெண், மாத்தறை மாவட்டம் கொப்பாராவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த  சிறுவனின் கண்ணில் காயமொன்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X