2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

விடுதிக்குள் நுழைந்தவர் கைது

Kanagaraj   / 2016 மே 30 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விவசாய பீட மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்தவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் இலுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் 28 வயதானவர் என்றும் இராணுவ வீரரரான அவர் கடமைநேரத்தின் போதே, விடுதிக்குள் நுழைந்துள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பண்டாரபுளியங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதிக்குள்ளேயே அவர் கடந்த 27ஆம் திகதி நுழைந்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர், கடமையாற்றும் சாலியபுர இராணுவ முகாமில் அவரை ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .