2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வெள்ளை வான் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மேர்வினுக்கு உத்தரவு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் வெள்ளை வான் கடத்தல் மூலம் காணாமல் போனவர்கள் தொடர்புடைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மக்கள் தொடர்பாடல்  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆதாரங்ளை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என்று மக்கள் தொடர்பாடல் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .