2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ.சு.கட்சியின்அம்பாறை மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள் இன்று நியமனம்

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளுக்கு ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்களாக பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நெளசாட், அம்பாறை மேற்கு தொகுதி அமைப்பாளராக நாடாளுன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரேசகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி, அம்பாறை மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி அன்வர் சியாத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான நாடாளுன்ற உறுப்பினர் சரத் வீரேசகரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் நியமிக்கப்படவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் லிபியா சென்றுள்ளதால் இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.(R.A)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .