Editorial / 2017 ஜூன் 13 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவதானமின்றி அலைபேசி பயன்படுத்துவதன் காரணமாக, கடந்த 5 மாதங்களில் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, ரயில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி அநுர பிரேமரத்ன, நேற்று(12) தெரிவித்தார்.
அபாயங்கள் நிறைந்த இடங்களில் செல்பி எடுத்தல், இயர்போன் அணிந்துகொண்டு அல்லது அலைபேசியில் கதைத்துக் கொண்டு ரயில் கடவை மற்றும் பாதையில் பயணித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட விபத்துகளால் இந்த உயிரிழிப்புகள் ஏற்பட்டதாக, அவர் கூறினார்.
இந்த மரணங்களில் அதிகளவானவை, கொள்ளுப்பிட்டி - கல்கிஸை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த விபத்துகள் அனைத்தும், வார இறுதி விடுமுறை நாட்களிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிகமான மரணங்கள், ரயில் மிதிபலகையில் நின்று செல்பி எடுப்பதனால் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பயணிகளில் அவதானமற்ற தன்மை காரணமாக இந்த விபத்துகள் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார்.
ரயில் பாதையில் பயணம் செய்வது சட்டவிரோதமான ஒன்றாக காணப்படும் நிலையில் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .