2021 மே 15, சனிக்கிழமை

4,000 ஹெரோய்ன் பக்கெட்களுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 27 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 4,000 ஹெரோய்ன் பக்கெட்கள் வைத்திருந்த நபரொருவரை, அதுருகிரியப் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிளிலே குறித்த ஹெரோய்ன் பக்கெட்களை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற வேளையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அருகிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பிறிதொரு சந்தேகநபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூன்று, அலைபேசிகள் ஐந்து, பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் ஹெரோய்ன் தூள் பொதி செய்யும் இயந்திரம் ஆகிவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த இரு சந்தேகநபர்களையும், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை (28) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .