2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த பெண் கைது

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட பகுதியில் தன்வசம் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த 36 வயது நிரம்பிய பெண்ணொருவரை பாணந்துறை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 40 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள், கையடக்க அலைபேசிகள் இரண்டு மற்றும் 1,940ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர்,கடந்த 2 வாரங்களாக குறித்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குறித்தப் பெண் கல்கிஸை-படோவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் கைது செய்யப்பட்ட பெண்ணை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .