Editorial / 2017 ஜூன் 05 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டு மாவட்டங்களில் 1,159 புதிய இடங்களில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்று இனங்காணப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே, மேற்குறிப்பிட்ட புதிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், புவியியல் நிபுணர் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
அந்தக் குழுக்களின் அறிக்கைகள் கிடைத்ததன் பின்னரே, அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு பிரிவின் தலைமை அதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.
களுத்துறையில் 465 இடங்களும், இரத்தினபுரியில் 451 இடங்களும், காலியில் 68 இடங்களும் கொழும்பில் 42 இடங்களும் உள்ளன என்றும் பண்டார தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் தற்போது நீடிக்கின்ற மோசமான வானிலை, இன்னும் சில நாட்களுக்கு இவ்வாறே தொடருமாயின் இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 34 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு ஏற்படகூடும் என்றும் பண்டார தெரிவித்தார்.
அதனடிப்படையில், இரத்தினபுரி மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், காலியில் -06 களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலையில் தலா நான்கு, ஹம்பாந்தோட்டையில் -02 மற்றும் நுவரெலியாவில் ஒன்று என மொத்தமாக 34 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
7 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago