2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நகரில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை உடைத்து 100 கிராம் பக்கெட்டுக்களில் விற்பனை செய்த மதுபாவனை விற்பனையாளர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மதுவரி அத்தியட்சகர் நடராசா சுசாதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - திருமலை வீதியிலுள்ள இம்மதுபான விற்பனை நிலையத்திலிருந்து 100 கிராம் பக்கெட்டுக்களாக பொதி செய்யப்பட்ட 36 பக்கெட்டுக்கள் நேற்று மாலை மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த மதுபாவனை விற்பனையாளர் 14 நாள்களுக்குள் தண்டப்பணமான 10 இலட்சம் ரூபாவைச் செலுத்தத் தவறினால், மேலும் ஒரு இலட்சம் ரூபாய் அதிகமாக மொத்தம் 11 இலட்சம் ரூபாய் செலுத்த நேரிடும் என்று மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--