2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

100 மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரம் உரிமை கோரப்பட்டுள்ளது. - கிளி.அதிபர்

Super User   / 2010 மே 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழாயிரம் மோட்டார் சைக்கிள்களில் 100 மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே இதுவரையில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி றூ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஏனையவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காட்டுவதற்கான கால  அவகாசம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

உரியவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காட்ட தவறும் பட்சத்தில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளிலுள்ள மக்கள் இடம்பெயரும்போது தமது வாகனங்களை கைவிட்டுச்சென்றிருந்தனர். இந்நிலையில் படையினரால் மீட்கப்பட்ட சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் கையளிக்கப்படவிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அறிவித்திருந்தார். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 5000 மோட்டார் சைக்கிள்களும், 7000 சைக்கிள்களும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவிருக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--