2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பெலுமஹரவில் தாக்குதல் : 11 பேர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலுமஹரவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றிரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், 11 பேர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும்இ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களை கலைப்பதற்கே கண்ணீர்புகை குண்டு வீசிஇ தண்ணீர் பீச்சியடித்ததாகவும் பாதுகாப்பு தர்ப்பினர் தெரிவித்தனர்.

இந்நிலையில்இ அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை  ஆய்வறிக்கை கிடைக்கும் வரையிலும் வெலிவேரிய பகுதியிலுள்ள தொழிற்சாலைகளை இரண்டுவாரகாலத்திற்கு தற்காலிகமாக மூடிவிடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுவரையும் அப்பிரதேசத்திற்கு பவுசர் மூலம் தண்ணீர் விநியோகிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--