2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வெலிக்கடையில் விசேட இராணுவ முன்னெடுப்பு; 11 சடலங்கள் மீட்பு; கைதிகள் தப்பிக்க முயற்சி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் இராணுவத்தினர் தலைமையில் விசேட முன்னெடுப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்தே இந்த விசேட முன்னெடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது உயிரிழந்த 11 பேரின் சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன், இதுவரையில் 40பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அத்துடன், சில நிமிடங்களுக்கு முன் மீண்டும் கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இராணுவத்தினர் இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .