Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கனகராசா சரவணன் / 2017 மே 24 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத்தில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்து வந்த இலங்கையர்கள் 120 பேர், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்கள், விசேட விமானம் மூலமாக இரண்டு கட்டங்களாக, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று (24) வந்தடைந்தனர்.
இலங்கையில் உள்ள முகவர்கள் ஊடாக குவைட் நாட்டுக்கு, வீட்டுப் பணிப் பெண்கள், மேசன், தச்சுத்தொழில், வாகன சாரதி உட்பட பணியாளர்களாகச் சென்றவர்களில் 120 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அங்கு, தொழில் வாய்பைப் பெற்றுச் சென்றதன் பின்னர், அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேறி விசா நடைமுறையை மீறி வெளியில் வேலை பார்த்துவந்த மற்றும் கடவுச்சீட்டு இன்றித் தங்கியிருந்தே இவர்கள் வேலைசெய்து வந்துள்ளனர்.
முதற்கட்டமாக காலை 9.30க்கு 50 பெண்கள் வந்தடைந்தனர். இரண்டாவது கட்டமாக, பிற்பகல் 2.30க்கு 70 பேர் வந்தடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .