2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

13 பல்கலை மாணவர்களுக்கு வகுப்புத் தடை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடங்களைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்படி பீடங்களைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் 13பேருக்கே இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி, துட்டுகெமுனு விடுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள மாணவர்கள், அங்கிருந்த நான்காம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் 8 மாணவர்கள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--