Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 17 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
படையினரால் கடந்த 2009ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 97 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் எஞ்சியுள்ள 3,010 குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக அரசாங்கத்தினால் 1,336 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையில் திர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு தகவலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில், 'மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் மேற்படி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,672 குடும்பங்களும் திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் 1,272 குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தில் 166 குடும்பங்களும் மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளனர். இவர்களுக்கான நிரந்தர வீடுகள், அடிப்படை வசதிகளுடனான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார். (M.M)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025