2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பெண்களின் இரவு ஆடைகளுக்குள் மறைத்து 15 கிலோ கஞ்சா கடத்தல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து 15 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவைக் கடத்தி வந்த மாத்தளை பிரதேச நபரொருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

23 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த கஞ்சா போதைப்பொருளானது, பெண்களின் இரவு ஆடைப் பொதிகளுக்குள் மறைத்தே சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஐகதான சந்தேகநபர் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருபவர் என்றும் இவர் ஆடை வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். (தீபா அதிகாரி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .