2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஐசிசி போலி இலச்சினையுடன் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் கைது

Menaka Mookandi   / 2011 மார்ச் 03 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

உலகக் கிண்ண கிரிக்கெட் (ஐசிசி) இலச்சினையைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்த 15பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

புறக்கோட்டை மற்றும் பமுனுவ போன்ற பிரதேசங்களில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஐசிசி இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ-சேர்ட்டுகள், தொப்பிகள், பைகள், கோப்பைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்பனியொன்றின் வழக்கறிஞர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே மேற்படி 15பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அசல் இலச்சினையுடன் கூடிய ஒரு ரீ-சேர்ட்டின் விலை 2,000ஆக இருக்கும் பட்சத்தில் குறித்த சந்தேக நபர்கள் போலி இலச்சினை பதித்த ரீ-சேர்ட்டுகளை 200 முதல் 250 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--