2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வெள்ளைக்கொடி வழக்கு: இறுவட்டு பதிவை ஏற்பது குறித்து 16ஆம் திகதி தீர்ப்பு

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுதீன், லக்மல் சூரியகொட)

இரத்தினபுரியில் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சரத் பொன்சேகா ஆற்றிய உரையின் சீராக்கப்பட் இறுவட்டு பதிவை வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமாக ஏற்க முடியுமா, இல்லையா என்ற பிரச்சினை மீதான தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் டிசம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஷ்ட அரச சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேலும் சில தகவல்களை வழங்கவுள்ளதால் கால அவகாசம் கோரினார்.

இதை மனுதாரரின் சட்டத்தரணி ஆட்சேபித்த போதும் ட்ரையல் அட் பார் (ஜுரி இல்லாத விசாரணை) நீதிமன்றம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .