Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொங்கொங்கை தலைமையாகக் கொண்ட சாங்கிரி-லா ஹோட்டல்கள் நிறுவனம் தனது இரண்டாவது ஹோட்டலை அமைப்பதற்கு இரண்டு இடங்களில் கண்வைத்துள்ளது. இவற்றுள் ஒன்று தென்பகுதியிலுள்ள பிரபலமான வன விலங்கு சரணாலயத்துக்கு அண்மித்த இடமாக உள்ளது.
மேற்படி சாங்கிரி-லா ஹோட்டலை நிர்மாணிப்பதற்காக 'யால' பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்தை குறித்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பார்வையிட்டதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.
அத்துடன் சாங்கிரி-லாவின் அடுத்த இடமானது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அண்மையில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஒன்றை சாங்கிரி-லா தெரிவு செய்யும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
சாங்கிரி-லா தனது முதலாவது ஹோட்டலை காலிமுகத்திடலுக்கு அண்மையிலுள்ள காணியொன்றில் கட்டவுள்ளது. இந்த காணியானது அரசாங்கத்திடமிருந்து 99 வருட குத்தகைக்கு பெற்றுகொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் நிர்மாணப் பணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கும் என கூறப்பட்டுள்ளது.
125 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி 99 வருட குத்தகைக்கு பெற்ற இந்த காணியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவளித்து ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது சாங்கிரி-லா நிறுவனம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago