2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

2 ஆம் மாடியிலிருந்து குதித்த சந்தேக நபர் உயிரிழப்பு

Super User   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

தங்கச் சங்கிலியொன்றை அபகரித்துக்கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவர், காலி பொலிஸ் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டபோது கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

13 வயதான சிறுவனொருவனிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

காலி பஸ்நிலையத்தில் வைத்து மேலும் பலருடன் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். காலி பொலிஸ் நிலயைக் கட்டிடத்தின் 2 ஆவது மாடியில்  அமைந்துள்ள குற்றவியல் பிரிவில் வைத்து விசாரிக்கப்பட்டபோது அவர் அங்கிருந்து குதித்ததாக தென் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

60 வயதான இந்த நபர், எல் பிட்டியவை சேர்ந்தவர் எனவும் பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டவர் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.

பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .