2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

20 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கட்சியின் தீர்மானங்களை மீறி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஆதரவு தெரிவித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஶ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு எதிர்வரும் முதலாம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு நேற்று முற்பகல், கட்சி தலைமையகத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .