2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் முயற்சியில் நிலா, விடியல் திரைப்படம்

Super User   / 2009 டிசெம்பர் 17 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர்ந்த  இலங்கைத் தமிழ் மக்களின் முயற்சியில் தமிழ் நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் நாளை பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருக்கின்றன.

விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய இலங்கை கலைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிலா திரைப்படம் முழுக்க முழுக்க கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்துக்கான இசையமைப்பை அண்மையில் தமிழினப் படுகொலையை பற்றி இதுவே இதுவே நிலையா என்ற பாடலை எழுதி வெளியிட்ட கனடிய இசையமைப்பாளர் சிறீஜிவன் பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

நிலா திரைப்படத்தின் கதை திரைக்கதை அமைத்து இயக்குனர் வி.எம்.தரன் இயக்கியுள்ளார். படத்தை வி.கந்தசாமி ஜெகன் தயாரித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .