2025 ஜூலை 02, புதன்கிழமை

மன்னார் நகர் வடிகாலமைப்பு பணிகள் இடைநிறுத்தம்; மக்கள் அசௌகரியம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகரில் முன்னெடுக்கப்பட்டு வந்த வடிகாலமைப்பு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

"யுனொப்ஸ்" திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபை மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியவை ஒன்றிணைந்து இந்த வடிகாலமைப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தன.

"யுனொப்ஸ்" அமைப்பின் 63 கோடி ரூபா நிதியுதவியின் கீழ் மன்னாரின் பல பகுதிகளில் வடிகாலமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த வேலைத்திட்டங்கள் தீடீரென இடைநிறுத்தப்பட்டமையினால் கழிவு நீர் வழிந்தோட முடியாது தேங்கி நிற்பதாகவும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, மேற்படி வடிகாண்களை துப்புரவு செய்யுமாறும் இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து மக்களின் அசௌகரியங்களைத் தீர்க்குமாறும் அம்மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .