2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

யாழ். குடாவில் எரிபொருளின் விலை குறைப்பு; அமைச்சரவையில் தீர்மானம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். குடாநாட்டில் எரிபொருட்களின் விலையைக் குறைப்பதான தீர்மானம் இன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ரீதியிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிலையிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், யாழ்.குடாநாட்டில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ரூபா 115.60ஆகவும் ஒரு லீற்றரின் டீசலின் விலை 73.60ஆகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை ரூபா 51.60ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் செலவுகள் குறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த எரிபொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன இந்த விலைக் குறைப்பினை உடன் அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--