2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் விபத்து:ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் வாகன சாரதி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன், 3 பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.மானவடு தெரிவித்தார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த வான் மின்கம்பத்துடன் மோதியபோதே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் உயிரிழந்த சாரதி கல்முனையைச் சேர்ந்த 38 வயதுடைய சீனித்தம்பி கலால்தீன் எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--