Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூலை 14 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல தசாப்தங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகள் முதல் தடவையாக தேசிய மின் விநியோகத் திட்டத்துடன் நேற்று புதன்கிழமை இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பகுதி மற்றும் நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின்விநியோக இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெய்லி மிரருக்கு அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
அரசாங்கம் நாடு முழுவதற்குமான மின்விநியோக அபிவிருத்திக்காக 36 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் இவற்றில் அரைப்பங்கு – 18 பில்லியன் ரூபா வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இல்லாதவாறு அப்பகுதியிலுள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளுக்கும் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலுள்ளதைப் போல் இங்கு மின் பாவனையில் புதிய கலாசாரமாக இது உள்ளது. எனவும் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago