2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்ட

Super User   / 2010 ஜூலை 15 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென  ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்  கோரியுள்ளார்.
 
 வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களை விடவும் தெற்கில் வாழும் சிறுபான்மை மக்கள்  அரசியலமைப்புத் திருத்தங்கள் திருத்தங்களினால் அதிக பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.
 
"நியாயமற்ற தேர்தல் முறைமையினால் தெற்கில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

விருப்பத் தெரிவு மற்றும் தொகுதி வாரி அடிப்படையிலான தேர்தல் முறைமைகள் அறிமுகப்படுத்துவது தொடர்பில்  தற்போது தேசிய ரீதியான கருத்தொற்றுமை காணப்படுகிறது. இக்கருத்தொற்றுமையையும் பொருத்தமான தேர்தல் முறைமைக்கான தேசிய ரீதியான  தேடலையும் நாம் ஆதரிக்கிறோம். 

தற்போது முன்வைக்கப்படும் கலப்பு தேர்தல் முறைமை குறித்துகூட தெற்கிலுள்ள சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதிவாரி தேர் முறைமைகளின் சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய நியாயமான அளவில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வகையிலான தேர்தல் முறை அவசியம்" என மனோ கணேசன் கூறியுள்ளார்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--