Janu / 2026 மார்ச் 17 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினரால் ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 255 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16.03.2026 அன்று ஆழ்கடலில் வைத்து குறித்த போதைப்பொருள் தொகையுடன் ஒரு மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்படகு திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பரிசோதனையின் போது குறித்த படகிலிருந்து கொக்கேன் 255 கிலோகிராம் 284 கிராம், ஹஷிஸ் (Hashish) 62 கிராம் மீட்கப்பட்டுள்ளன
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் 28 முதல் 54 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள் நீர்கொழும்பு, அஹுங்கல்ல, எல்பிட்டிய மற்றும் தெல்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குறித்த மீன்பிடி படகின் உரிமையாளரான அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வைத்திருந்தமை, கடத்தல் மற்றும் நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும், இக்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் படகு உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
11 minute ago
26 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
58 minute ago
1 hours ago