2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கல்முனையில் சனிக்கிழமை மின்வெட்டு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 4.30 மணிவரை மின்வெட்டு அமுலிலிருக்குமென கிழக்கு மாகாண மின்சாரசபை அறிவித்துள்ளது.

அம்பாறை மின்நிலையத்தில் ஏற்படவுள்ள திருத்த வேலை காரணமாகவே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை மின்பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாண்டிருப்பு, பெரியநீலாவனை, நற்பிட்டிமுனை, மருதமுனை,  நாவிதன்வெளி,  சம்மாந்துறை, வீரமுனை உள்ளிட்ட பகுதிகளிலேயே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--