2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அக்குறணை பிரதேச செயலாளர் நஸீரின் வீட்டில் கொள்ளை

Menaka Mookandi   / 2010 ஜூலை 15 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குறணை பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.நஸீரின் வீட்டில் சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட உடைமைகள் களவாடப் பட்டுள்ளன.  நேற்று புதன்கிழமை இரவு 7 மணிமுதல் 10 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரதேச செயலாளரும் அவரது குடும்பத்தினரும் வெளியே சென்றிருந்ததாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வீட்டுக்குள் புகுந்துள்ள கொள்ளையர்கள் வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இரவு 10 மணியளவில் வீடு திரும்பிய பிரதேச செயலாளர், தனது அறை உடைக்கப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபா பணம், மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, நகைகள் உட்பட மற்றும் பலபொருட்கள் களவாடப்பட்டுள்ளதை அறிந்தார்.

இவ்வாறு களவாடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமானம் சுமார் 10 இலட்ச ரூபா எனத் தெரிய வருகிறது. சமவத்தை அடுத்து இது தொடர்பாக கட்டுகஸ்தோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

  Comments - 0

  • jameel Thursday, 15 July 2010 09:20 PM

    பாவம் நல்ல மனிதர் அவர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .