2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மட்டக்களப்பு வாவியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய  வாவியான மட்டக்களப்பு வாவி நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டபோது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டதுடன், 7 தோணிகள், பெருமளவிலான வலைகள் உட்பட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டெமினிக் ஜோர்ஜ் தெரிவித்ததார்.

இச்சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--