2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கரையோரப் பிரதேசங்களில் கடற்கரை பூங்காக்களை அமைக்கத் திட்டம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கரையோரப் பிரதேசங்களில் கடற்கரைப் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, களுத்துறையில் கடற்கரைப் பூங்காவொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் நவீனமயப்படுத்தப்பட்ட நகரமாக களுத்துறை கடற்கரைப் பிரதேசம் வடிவமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன, களுத்துறை கடற்கரையோரப் பிரதேச பூங்காவானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உபயோகமானதாக அமையும் எனவும் கூறினார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:-

கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதுடன், இந்த வருட இறுதிக்குள் முதற்கட்டப் பணிகள் முடிவடையும். அத்துடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலா விடுதிகளின் நிர்மாணப் பணிகளும் 2011ஆம் ஆண்டுக்குள் முடிவடையும்.

இலங்கையில் 16 கடற்கரையோர பூங்காக்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் சிலாபம், காக்காபள்ளி, வெள்ளவத்தை, பாணந்துறை, பேருவளை, ஹிக்கடுவை மற்றும் அறுகம்பை போன்ற நகரங்களில் இவை அமையவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--