2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

தென்பகுதியில் பரவும் தெங்கு நோயை கட்டுப்படுத்த கேரளா முறை அறிமுகம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்பகுதியில் பரவிவரும் தென்னை நோயைக் கட்டுப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, நோய்க்கு தாக்குப்பிடிக்கும் தன்மையின் அடிப்படையில் கேரளா முறையைப் பின்பற்றவுள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சித்தராங்கனி ஜயசேகர தெரிவித்தார்.

தெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பழைய தென்னை மரங்களை முற்றாக அழித்து, அவற்றுக்கு பதிலாக நோய்த்தாக்குப்பிடிக்கக் கூடிய புதிய இனத்தை பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவின் கேரளா மாநிலம் குறித்த நோயினை கட்டுப்படுத்தியது.  எனவே, கேரளாவில் பயிரிடப்பட்ட புதிய இனத்தை இலங்கையிலும் பரீட்சிப்பதாக பணிப்பாளர்  தெரிவித்தார்.

இவ்வாறு, நான்கு புதுவகையான தெங்கு இனங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாகவும் நோய் எதிர்ப்புத் தன்மையின் அடிப்படையில் அது முடிவு செய்யப் படும் எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0

  • xlntgson Friday, 16 July 2010 09:27 PM

    நல்ல விடயம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .