2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கதிர்காமத்தில் விபத்துக்கு; ஐவர் காயம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டம், ஹாலிஎல, அட்டம்பிட்டிய தோட்டத்திலிருந்து கதிர்காமத் தலத்திற்கு யாத்திரை சென்றவர்களின் வான் விபத்துக்குள்ளாகியதில் ஐவர் காயமடைந்துள்ளனர். புத்தல – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹாலிஎல, அட்டம்பிட்டி தோட்டத்தைச்சேர்ந்த 15பேர் இன்று காலையில் வான் ஒன்றில் புறப்பட்டு புத்தல – கதிர்காமம் பிரதான பாதையினூடாக கதிர்காமத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த வானின் டயர் ஒன்று திடீரென வெடித்ததில் அது பிரதான வீதியில் இழுபட்டுச்சென்று கவிழ்ந்துள்ளது.

இதனால், அந்த வேனில் பயணித்தவர்களில் 5பேருக்கு பலத்த காயமும் ஏனையவர்களுக்குச் சிறுசிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் கதிர்காமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--