2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

தமிழரின் மறுவாழ்வுப் பணிகளை அவதானிக்க சிறப்புப் பிரதிநிதி இலங்கை செல்ல வேண்டும் -கருணாநிதி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


நலன்புரி நிலையங்களிலுள்ள  தமிழ் மக்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை அவதானிப்பதற்காக சிறப்புப் பிரதிநிதியை அங்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தீர்மானமொன்றை முன்வைத்துள்ளார்.

இந்தியப்  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இந்தத் தீர்மானத்தை முன்வைத்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பிலான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம்   எடுக்க வேண்டும் எனவும், இதன் மூலம்  இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள்,  சாமாதனம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க முடியும்   எனவும் மு.கருணாநிதி குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கோரி ஜூலை மாதம்  9ஆம் திகதி மன்மோகன் சிங் அனுப்பி வைத்த கடிதத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும்  வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமது அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கோரி வந்ததாகவும்,  இது தொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்தபோதும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கருணாநிதி தமது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் சென்று வாழ்வதற்கான அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் கருணாநிதி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--