2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படலாம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இதன் வான்கதவுகளை எந்த நேரமும் திறந்து விடப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலைப்பகுதிகளிலும் ஆற்றோரங்களிலும் வாழ்கின்றவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கொத்மலை நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியிலாளர் எல்.எம்.ஜி.விஜேசேகர அறிவித்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலை நிலையைத்தொடர்ந்து காலை வேளையிலும் மாலை வேளையிலும் மேக மூட்டம் ஏற்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வீதி போக்குவரத்தில் ஈடுபடவேண்டுமென நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--