2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஐ.தே.க.வின் வாக்கு வீதம் குறைந்ததால் மு.கா.வுக்கும் பாதிப்பு - ரவூப் ஹக்கீம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் குறைவடைந்ததானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வீதமும் குறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பிருமான ரவூப் ஹக்கீம் கூறினார். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், வட மாகண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் எதிர்வரும் அக்டோபர்மாதம் பூர்த்தியாகவுள்ள நிலையில் இந்த வெளியேற்றத்தை சர்வதேச சமூகத்திற்கு காட்டும் வகையில் எமது பாரிய செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்து 10 ஆண்டுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ளதனை முன்னிட்டு குர் ஆன் ஆராய்ச்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்கவுள்ளதாகவும் அதற்காக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டம் என்ற அடிப்படையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று நடவடிக்கைகளை  மேற்கொள்ளவுள்ளதாகவும் அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை விஸ்தரிப்பு செய்வதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நிமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தர்ர். இச்செயற்குழு கூட்டத்தில் நாடளாவிய ரீதியிலிருந்து 500 மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--