2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

டெங்கு நோய் சிகிச்சைக்கு பப்பாளி இலைச்சாறு

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பப்பாளி இலைச் சாறு மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பருக்குவதன் மூலம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குருதிச் சிறுதட்டுக்களின் அளவினை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று இந்த முறையின் மூலம் 20 டெங்கு நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளதாகவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

வெலிபிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.எம்.என்.அமீன் என்பவரே பப்பாளி இலைச் சாறு சிகிச்சை மூலம் 20 நோயாளிகளைக் குணப்படுத்தியவராவார்.

இச்சிகிச்சையின் விஞ்ஞான ரீதியான விளக்கம் தெரியாத போதிலும் திரவ உணவுகளுக்கிடையே இந்த பப்பாளி சாற்றை வழங்குவதால் பாதிப்பு ஏற்படாது என்று மாத்தறை பொது வைத்தியசாலை வைத்தியரான பிரதீப் குமார  தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பப்பாளி குறித்திலைச் சாறானது, மனித உடலிலுள்ள குருதிச் சிறுதட்டுக்களின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என்று அபருக்க ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் டபிள்யூ.கே.எம்.அபேசேகர கூறினார்.   Comments - 0

 • koneswaransaro Monday, 19 July 2010 03:30 AM

  இலங்கை நிபுணர்கள் டெங்குவுக்கு மருந்து கண்டுபிடித்தாலும் அது எங்கள் காதுகளிலே விழாது.நாங்கள் வெளிநாட்டுக் கம்பனிகளுடன் ஒப்பந்தம் செய்து இறக்குமதி செய்தால்தானே எங்கள் பை நிரம்பும்.

  Reply : 0       0

  xlntgson Friday, 23 July 2010 09:38 PM

  சரோவின் கருத்து சரி,தேவைக்கு கூடுதலாகவே கூட சில மருந்துகளையே திருப்பி திருப்பி தருவித்து பின்னர் காலாவதி என்று குப்பையில் கொட்டி இருக்கின்றனர்.மிக அத்தியாவசியமான மருந்துகளை இங்கே உற்பத்தி செய்வதாகவும் தருவிக்க தேவை இல்லை என்று ஏமாற்றியதும் உண்டு.இதில் இதயசுத்தி அவசியம் மோசடிக்கு துணை போகாதீர்கள்! யாரும் உலகில்நூறுவருடம் வாழப்போவதில்லை.எல்லாருக்கும் ஒருவிதமான கேள்விகணக்கு உண்டு, மறுபிறவியோ, நரகமோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .