2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வவுனியா பஸ் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
கிளிநொச்சி மரதன் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகேந்திரன் (வயது 47) என்பவரே இவ்வாறு பலியானதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் முன்னிலையில் மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்றது.
 
குறித்த தனியார் பஸ்சின் நடத்துனரே இவ்விபத்து நடைபெற்றபோது பஸ்ஸை செலுத்தியதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த தனியார் பஸ்சின் நடத்துனர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விபத்தினால் ஏற்பட்ட மரணம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--