2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க எம்.பி சுஜீவ சேனசிங்க பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டி.பாருக் தாஜுதீன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ அர்ஜுன சேனசிங்க 50,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி ஒமரே கசப்ப தேரர்   நீதிமன்றத்திற்கு வரும்போது அவரை  திட்டியதாக சுஜீவ  சேனசிங்க  மீது வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுஜீவ  சேனசிங்க நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். 

மேற்படி வழக்கு விசாரணை எதிர்வரும்ம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

குணரட்ன வன்னிநாயக்க, மஞ்சுள பத்திராஜ ஸ்ரீலால் டந்தெனிய, சந்திர அபயரட்ன மற்றும் சேனக பெரேரா ஆகியோர் சுஜீவ அர்ஜுன சேனசிங்க சார்பில் நீதிமன்றத்திற்கு ஆஜராகியிருந்தனர்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--