2026 மார்ச் 02, திங்கட்கிழமை

சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன்? பரபரப்பு தகவல்

S.Renuka   / 2026 மார்ச் 02 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து அமெரிக்க அதி​காரி​கள் பரபரப்பு தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது தாக்குதல் நடத்திதியமை தொடர்பில் அமெரிக்க அதி​காரி​கள் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று கூறிய​தாவது,

ஈரான் அதியுயர் தலை​வர் அயத்துல்லா அலி காமேனி மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டோம். முதல் கட்​டத்​திலேயே அதிர்ச்சி அளிக்​கும் வகை​யில் தாக்​குதல் இருக்க வேண்​டும் என்று நினைத்​தோம்.

மேலும், சனிக்​கிழமை (28) மாலை காமேனி முக்​கிய ஆலோ​சனை நடத்த இருப்​ப​தாக எங்​களுக்​குத் தகவல் கிடைத்​தது. அதனால், நாங்​கள் தாக்​குதல் நடத்த போவது குறித்து தகவல் கசிந்து அவர் தப்​பி​விட்​டால் நிலைமை மோச​மாகி விடும்.

இதற்​கிடை​யில், சனிக்​கிழமை (28) மாலை​ நடக்க இருந்த ஆலோ​சனை கூட்​டம் காலை​யிலேயே நடை​பெறவுள்​ள​தாக இஸ்​ரேல் உளவுப் பிரி​வினர் கண்​டு​பிடித்து தகவல் தெரி​வித்​தனர். அதனால் வேறு வழி​யின்றி உடனடி​யாகத் தாக்​குதலை தொடங்கி விட்​டோம்.

இவ்​வாறு அமெரிக்க அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அமெரிக்க, இஸ்​ரேல் தாக்​குதலில் காமேனி கொல்​லப்​பட்டதை ஈரான் உறுதி செய்​துள்​ளது. மேலும் காமேனி​யின் மகள், மரு​மகள், பேத்​தி​யும் உயி​ரிழந்​துள்​ள​தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .