S.Renuka / 2026 மார்ச் 02 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய இராணுவ நிலைவரத்தைக் கணக்கில் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்தப் போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை அவர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய ட்ரம்ப், போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை எனினும் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, “அவர்கள் இப்போது பேச விரும்புகிறார்கள், ஆனால், கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும்” என்று பதிலளித்த அவர், தற்போதைக்குத் தாக்குதல்கள் தொடரும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
21 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago