Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரியபண்டிவிருச்சான் கிராம மக்களுக்கு சகல வேலைக்கும் பயன் தரக்கூடிய பெரியபண்டிவிருச்சான் குளம் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமையால் அப்பகுதி மக்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 606 ஏக்கர் நிலப்பரப்புக்களில் மேற்கொள்ளப்படும் நெற்பயிர் செய்கைக்கான நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்பட்டது. இதனால் பெரிய பண்டிவிருச்சான் கிழக்கு, மேற்கு, சின்னபண்டிவிருச்சான் ஆகிய மூன்று கிராம விவசாய மக்களும் பயனடைந்திருந்தனர்.
தற்போது குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் பிரதான வாய்க்கால்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, குறித்த கண்ணிவெடிகளை அகற்றினால் மட்டுமே தங்களால் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள முடியும் என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
18 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago