2025 ஜூலை 12, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கு கொழும்பு மாநகரசபை எச்சரிக்கை

Super User   / 2010 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

பாடசாலை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கத் தவறினால்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கொழும்பின் 14 முன்னிலை பாடசாலைகளின் அதிபர்களுக்கு கொழும்பு மாநகர சபை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பின் முன்னிலை பாடசாலையொன்றின் மாணவர் விடுதியில் தங்கிருந்த 20 பேர் அண்மையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்தும் புறக்கணித்தால் இப்பாடசாலைகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்" என கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

20 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து அவர் கூறுகையில், பாடசாலை மண்டபத்தின் அடித்தளத்தில் தேங்கி நின்ற அழுக்கடைந்த நீர் இந்நோய் பரவலுக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகள் காலை 7.30 மணியளவில் அதிகமாக திரிவதால் பாடசாலை நேரத்தையும் மாற்றியமைக்க வேண்டுமெனவும் டாக்டர் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு நுளம்புகளின் முட்டைகள் உலர்ந்த இடத்திலும் பல மாதங்கள் தாக்குப்பிடிக்கக்கூடியவை. ஒரு தேக்கரண்டி அளவு நீர்கூட இந்நுளம்புகளின் பெருக்கத்திற்குப் போதுமானவை. அதனால் சூழலை தொடர்ச்சியாக சுத்தம் செய்வது அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார். (DM)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .