2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழ் தேவி சேவை நேரத்தில் மாற்றம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியாவிலிருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் யாழ் தேவி ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை மாலை 5.45 மணிக்கு சென்றடையும் என்று வவுனியா புகையிரத நிலைய அதிபர் கூறினார்.

இதுவரை காலமும் இந்த ரயில் வவுனியாவிலிருந்து கடுகதி சேவையாக மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

புதிய நேர அட்டவணை பிரகாரம் காலை 5.45 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த ரயில், பகல் 11.10க்கு தாண்டிக்குளத்தை வந்தடையும். பகல் 12.45 மணிக்கு வவுனியாவிலிருந்து கோட்டை நோக்கி புறப்படும் எனவும் நிலைய அதிபர் மேலும் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--